அரூப நடனம்
கொடியில் உலரும்
குழந்தைகளின் ஆடைகளை
அணிந்து கொண்டு
நடனமிடுகிறது காற்று
காற்றின் அரூப உடல் மொழியில்
சுழலும் ஆடை
குழந்தையாகி குதுாகலிக்கிறது
பெண் குழந்தைகளின்
பிரில் வைத்த பாவாடைகள்
காற்றின் உடலுக்கு
கச்சிதமாய் பொருந்திப் போக
நிசப்தமாய் நிழ்ந்து கொண்டே இருக்கிறது அதன் நடனம்
.....
- தென்பாண்டியன்
( குமுதம் திராநதி பிரசுரமானது )
No comments:
Post a Comment