வனம் பெருகுதல்
....முன்பொரு காலத்தில்
இப்பெரும் தேசத்தின்
இளவரசானாய் இருந்தேன்
தரையிறங்கிய துஷ்ட தேவதைகள்
என் தேசத்தை வென்றெடுத்த போது
என் நாட்டின் பிரஜைகள்
பறவைகளாகவும்
தோல்வியுற்ற எனது சேனைகள்
மரங்களாகவும் சபிக்கப்பட்டனர்
தேசமிழந்து வனமெங்கும்
தனிமை கொண்டலையும் நான்
வெட்டப்படாத மரங்களால்
வனங்கள் பெருகவும்
வேட்டையாடப்படாத பறவைகளால்
வானம் நிறையவும்
என் பழங்கடவுளை வேண்டி நிற்கிறேன்.
- தென்பாண்டியன்
No comments:
Post a Comment