Tuesday, October 20, 2009

கவிதை


பூனை வீடு

இசையால் நிரம்பியதிரும்
அந்த வீடு பூட்டியிருக்கிறது

எதேச்சையாக பியானோ மீது
தாவி நடக்கத்துவங்கிய
பூனையின் கால்கள்
இசை வயப்பட்டு மீண்டும் மீண்டும்
நடக்கிறது

மின்சாரம் துண்டிக்கப்பட்ட மழையிரவில்
அசைவற்று கண்கள் ஒளிர
பூனை அமைதி கொள்கிறது

மழை நின்று
குளிர்ந்து புலரும் ஈரவிடியலில்
கண்களயர்ந்து பூனை உறங்கிவிடுகிறது

சன்னலிடையே உள்நுழையும்
வெயிலில்
தூசியகன்ற பியானோக் கட்டைகள் பளிச்சிடுகின்றன

3 comments:

  1. அட்டகாசம் தென்பாண்டியன் சார்
    பியானோ கட்டைகள் எப்போதும் வசீகரிப்பவையாக இருந்து வருகின்றன எனக்கும்

    ReplyDelete
  2. நன்றாக வந்திருக்கிறது. ஒரு குறும்படம் போல.
    கடைசி வரியில் ``பியானோக் கட்டைகள்''
    என்ற அச்சுப் பிழையை சரி செய்யுங்கள்
    கலாப்ரியா

    ReplyDelete