Thursday, July 23, 2009


பிரிய தெய்வங்கள்

நிறைவான புணர்சிக்குப்பின்
நிகழும் ஆழ்ந்த உறக்கத்திற்கான
வேட்கையோடு
மதுரசம் நிறைந்த சிறு குவளையின்
பேராழத்திற்குள் மூழ்குகிறேன்
என் பிரிய தெய்வங்களில் ஒருத்தி
தன் நிர்வாணத்தை பரிசளிக்கிறாள்
என் சயன அறையெங்கும்
நறுமணம் கமழ அவள் தன் பருவங்களை
மலர்த்துகையில்
அமிர்தம் கசியும் மதுரசதோடு
எல்லா சன்னல்களையும்
திறந்து கொண்டு
பெய்கிறது மழை
ஆகாயத்திற்கும் எனக்குமான
தூரம் மிகுதியானது என்றாலும்
பார்வைக்கு அண்மை கொள்கிறது நிலவு




யுகாயினி

எழுந்து வா என் யுகாயினி

சர்பரூபமாகி எனைத் தீண்டு

கனியுண்ட கானகம் வா

குறி பொருந்த என்னில் அமர்

புனல் பெருக நின்றெழு

உன் யோனி வணங்கிப்

பணிதல் வேண்டும் நான்

3 comments:

  1. அம்மாடியோவ்... பிண்ணிட்டீங்க! சமீப காலத்துல இவ்வளவு நுட்பமான சமாச்சாரத்தை எனக்குப் புரியறமாதிரி எழுதிய வகையில் உங்களுக்கு என் நன்றியும், வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  2. மொழியை வளைத்து சாகசம் செய்கிறீர் நண்பரே!! உங்கள் கவிதையை என் பக்கத்தில் போடலாமா?

    ReplyDelete
  3. yugayini kkum kavigarukkum irukkum antharangam namakkethukku/Sirpi

    ReplyDelete